top of page
loader,gif
The Church from the Side
Novena to St. Antony
The Most Efficacious Prayer to St. Antony

O Holy St. Antony, the gentlest and kindest of Saints, your burning love of God, your exalted virtue, and your great charity towards fellow creatures, made you worthy, when on earth, to possess miraculous, such as were given to no other Saint. Miracles waited on your word, and that word you were ever ready to speak at the request of those in trouble. The anxious prayer of bitter trial was never addressed to you in vain. To the sick you gave back health; You restored what was lost; the sorrow stricken were the objects of your tender compassion; even the dead you raised to life, when the wounded heart cried out to you from the depths of it's bitter anguish you answered them. When on earth nothing was impossible with you. Encouraged by this thought, and convinced off the efficacy of your holy intercession, we kneel before your holy image, and full of confidence, we implore you to obtain for us...(Our Present Need). The Answer to this our prayer requires a miracle. You are the Saint of miracles. O Gentle and loving St. Antony, you, whose heart was ever full of human sympathy, whisper our prayers and petitions into the ears of the Infant Jesus, who loved to linger in your arms. One Word from you and our prayers will be granted. O Speak that word and the gratitude of hearts will ever be yours. Amen

The Statue of St. Antony of Padua as in the Church.
புனித அந்தோணியரை நோக்கி ஆற்றல் மிக்க மன்றாட்டு 

இறைவனது இரக்கத்திற்கும், பேரன்பிற்கும் முற்றும் உரியவரான புனித அந்தோணியாரே! உம் வழியாக கடவுளிடம் மன்றாடுபவர்கள் தங்கள் மன்றாட்டின் பலனை அடையாமற் போனதில்லை. எங்கள் ஆன்ம, சரீர தேவைகளில் தந்தைக்குரிய அன்புடன் பேருதவி புரிவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். குழந்தை இயேசுவை உமது கரங்களில் ஏந்த பாக்கியம் பெற்ற புனித அந்தோணியாரே! எங்கள் ஆன்ம விரோதிகளோடு நாங்கள் செய்யும் போராட்டத்தில் எங்களுக்கு துணை புரிவீராக. தீமையை வெல்லவும், நன்மை செய்யவும் பக்க பலமாய் இருப்பீராக. நற்கருணை நாதர் மேல் பக்தியும் இறை வார்த்தையின் மீது நம்பிக்கையும் கொள்ள அருள்புரிவீராக. நாங்கள் கேட்பதை தட்டாமல் தருகின்ற தயாள மனம் படைத்தவரே! எங்கள் மனக் கவலைகளில் உமது ஆறுதலையும், நோயில் சுகத்தையும் எதிர்பார்த்து உமது பேருதவி நாடி வருகின்றோம். எங்கள் குடும்பங்களில் சமாதானம் நிலவவும், தொழில் முன்னேற்றம் காணவும், மன நிம்மதியோடு வாழவும் உம்மை நோக்கி வேண்டுகின்றோம். எங்களுக்கு உதவி செய்ய வாரும். எங்களை கைவிட்டு விடாதேயும். அழியா நாவுடைய புனித அந்தோணியாரே! உமது வல்லமையுள்ள மன்றாட்டால் இறைவனது இரக்கத்தையும் உதவியையும் பெற்றவர்களாய் நாங்களும் உம்மோடு என்றென்றும் இறைவனைப் புகழ்ந்தேத்தும் வரம் பெற்றுத் தருவீராக. ஆமென்!

bottom of page